• Sep 19 2024

பிரஸ் மீட்டில் திடீரென கெட்டவார்த்தை பேசி ஜெர்க் கொடுத்த இயக்குநர் ஹரி-ஷாக்கான படக்குழு..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் இயக்குநர் ஹரி.இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாக இவர் பரவலாக அறியப்படுகிறார்.

இவ்வாறுஇருக்கையில் அருண் விஜய் முதல் முறையாக அவருடைய அக்கா கணவர் ஹரி இயக்கும் யானை படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்துக்கு முன்னதாக சூர்யாவை வைத்து அருவா படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார் ஹரி. ஆனால் அந்த படம் ட்ராப் செய்யப்பட்ட நிலையில் அருண் விஜய்யோடு இணைந்தார்.

இந்நிலையில் யானை திரைப்படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் ரிலீஸ் தேதி ஜூன் 17க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் “யானை சென்சாருக்கு தயாராகி வருகிறது. விரைவில் டிரைலர் வெளியாகும்” என அருண் விஜய் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நேற்று யானை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய இயக்குநர் ஹரி படம் பற்றி பல விஷயங்களை பேசினார். பேசிக்கொண்டிருக்கும் போதே திடீர்னு கெட்டவார்த்தை ஒன்றைப் பேசிவிட அனைவரும் முகம் சுளித்தனர். இதன் பின்னர் தான் பேசியதை உணர்ந்த அவர் சிரித்து நிலைமையை புரிந்துகொண்டு மீண்டும் பேசினார்.

Advertisement

Advertisement