• May 20 2024

அயலான் திரைப்படத்தில் ஏலியனாக நடித்தவர் இந்த நடிகர் தானா?- இதுவரை தெரியாமல் போச்சே....

stella / 7 months ago

Advertisement

Listen News!


இன்று நேற்று நாளை படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் ரவிகுமார், இயக்கத்தில் சிவகார்த்திகேன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து  யோகி பாபு, ராகுல் ப்ரீத் சிங், கருணாகரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.அத்தோடு இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

6 ஆண்டுகளுக்கு மேலாக உருவாகிய இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் அதை மெனக்கெட்டு VFXல் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர். 


அயலான் ஒரு பான் இந்தியன் திரைப்படம். அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகள் கொண்ட படமாக இருக்கும் என்றும் அண்மையில் தயாரிப்பு நிறுவனம் அறிக்்கை வெளியிட்டிருந்தது.அத்தோடு அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


என்னதான் VFXல் ஏலியனை பிரமாண்டமாக காட்டியிருந்தாலும், VFXக்கு உதவும் வகையில் நடித்த நடிகர் யாரென்று இதுவரை பலருக்கும் தெரியவில்லை. அவருடைய பெயர் வெங்கட் செங்குட்டுவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement