• Jan 18 2025

சூர்யாவை விட்டுட்டு ஜோதிகா மும்பையில் குடியேறியதில் தப்பே இல்ல... இதுதான் காரணமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார் ஜோதிகா. இந்நிலையில் திருமணமாகி இத்தனை ஆண்டுகள் கழித்து அவர் தன் மகள் தியா, மகன் தேவுடன் மும்பையில் குடியேறிவிட்டார். மாமனார் சிவகுமாரின் தொல்லை தாங்கவில்லை. சினிமாவில் மீண்டும் நடிப்பது தொடர்பாக பல கன்டிஷன் போடுகிறார். அதனால் தான் ஜோதிகா ஊரை காலி செய்துவிட்டார் என பேச்சு கிளம்பியது.


ஜோதிகா மும்பையில் செட்டில் ஆனது நிரந்தரமும் அல்ல மேலும் அதற்கு காரணம் சிவகுமாரும் அல்ல. ஜோதிகாவின் பெற்றோர் மும்பையில் வசித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டபோது ஜோதிகாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நேரம் விமான சேவை இல்லாததால் ஜோதிகாவால் மும்பைக்கு சென்று பெற்றோருக்கு உதவியாக இருக்க முடியவில்லை. இதை ஜோதிகா தான் கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது,


25 வயதில் இருந்து சென்னையில் தான் வசித்து வருகிறேன். என் பெற்றோருடன் நான் வசித்தது குறைவே. திருமணமாகிவிட்டால் பெற்றோரை பார்த்துக்கொள்ள நேரம் இல்லாமல் போய்விடுகிறது. திருமணத்திற்கு பிறகு வரும் பொறுப்புகளால் பெற்றோருடன் அதிக நேரம் செலவிட முடிவது இல்லை. அதனால் தான் என் பெற்றோருடன் நேரம் செலவிட வேண்டும் என விரும்பி மும்பையில் குடியேறியிருக்கிறேன்.


நான் நிரந்தரமாக மும்பையில் வசிக்கப் போவது இல்லை. இது தர்காலிகம் தான். பிள்ளைகளின் படிப்புக்கு மும்பை சரியாக இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவர் சூர்யா. இப்படித் தான் நடக்க வேண்டும், இப்படித் தான் என கட்டாயப்படுத்தும் ஆள் இல்லை என் கணவர் என்று கூறியுள்ளார். 

Advertisement

Advertisement