• May 20 2024

பிக்பாஸில் எப்படி விளையாடுவது என்று ஜி.பி முத்து வைத்திருக்கும் கேம் பிளான் இது தானா?- இம்பிரஸ்ட் ஆன ஹவுஸ்மேஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த இரண்டு வாரங்களுக்கு முதல் ஆரம்பமாகி சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றது. வீட்டிற்குள் பல பரபரப்பான விஷயங்கள் இயங்கிக் கொண்டே இருக்கும் அதே வேளையில், முதல் நாள் முதல் இந்த தருணம் வரை தொடர்ந்து தானும் ஜாலியாக இருந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் கலகலப்பாக வைத்து வருகிறார் ஜிபி முத்து.

 இதன் காரணமாக, தொடர்ந்து அவரை பின்பற்றும் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.அது மட்டுமில்லாமல், பிக்பாஸ் வீட்டிற்குள்ளும் பலரது பேவரைட் நபராகவும் ஜிபி முத்து வலம் வருகிறார். அந்த வகையில், பிக்பாஸில் ஜிபி முத்து போட்டு வைத்துள்ள பிளான் குறித்து சக போட்டியாளர்கள் கேட்கின்றனர்.


 பிக்பாஸில் வெற்றி பெற வைத்துள்ள Strategy பற்றியும், என்ன பிளான் வைத்துள்ளீர்கள் என்பது பற்றியும் சக போட்டியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இதற்கு பதிலளிக்கும் ஜிபி முத்து, "பிக்பாஸ பாத்தாச்சு, கிளம்புவோம்" என சாதாரணமாக சொல்கிறார். பிக்பாஸ் போன்ற போட்டிகளில் வெற்றி பெற உள்ளே ஒரு போட்டியாளர் ஆடும் கேம் பிளான் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 


ஆனால், மிகவும் சர்வ சாதாரணமாக வந்தாச்சு இனி கிளம்ப வேண்டியது தான் என்ற தொனியில் ஜிபி முத்து குறிப்பிட்டுள்ளார்.போட்டி என்பதை தாண்டி, பிக்பாஸ் வீட்டை ஒரு குடும்பம் போல தான் ஜிபி முத்து காண்பதாகவும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.அத்தோடு தலைவர் போட்டியில் கூட விட்டுக் கொடுக்காமல் நின்று ஜெயித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement