• Apr 23 2024

வாரிசு படத்தின் இசைவெளியீட்டுக்கான டிக்கெட்டின் விலை இவ்வளவா?-அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தமிழ் மற்று் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.குடும்ப செண்டிமென்ட் கதை அம்சத்தைக்கொண்ட இப்படத்தில், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விஜய் பேச்சை கேட்க ரசிகர்கள் இப்போதே தயாராகி விட்டனர். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ரசிகர்கள் இடையே மிகப்பெரிய அளவில் டிரெண்டானது.


 இந்த இசைவெளியிட்டு விழாவில் விஜய் என் பேச போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கர் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் இசைவெளியீட்டுக்கான டிக்கெட் பரபரப்பாக விற்றுவரும் நேரத்தில், ஒரு டிக்கெட்டின் விலை 4000 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இந்த தகவலால் விஜய்யின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement