• May 08 2024

நடிகை ஸ்ரேயாவின் மகள் ராதாவா இது?- அட அதுக்குள்ள இப்படி வளர்ந்திட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரேயா சரண். இவர் விஜய் ஜெயம் ரவவி தனுஷ் ரஜினி எனப் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். அதிலும் இவர் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த “சிவாஜி” திரைப்படம் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது.

ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியாகியிருந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். பின்பு கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணத்திற்குப் பிறகு சிலகாலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் மீண்டும் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து ரி என்ட் ரி கொடுத்து இருந்தார்.

மேலும் தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக சில மாதங்களுக்கு முன் ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த அளவுக்கு தனது குழந்தைப் பிறப்பு குறித்து எந்த ஒரு செய்தியையும் அதுவரை பகிராமல் ஸ்ரேயா சரண் அமைதி காத்தார்.

மேலும் குழந்தை 2020 ஆம் ஆண்டு லாக்டவுனில் பிறந்ததாகவும், குழந்தைக்கு ராதா என பெயரும் தற்போது குழந்தைக்கு 2 வயது ஆகுவதாகவும் தெரிகிறது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ரேயா சரண் குழந்தையுடன் விளையாடுவது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement