• May 19 2024

எதிர்நீச்சல் சீரியலில் ஹரிப்பிரியா நந்தினியாக நடிக்க இப்படி தான் வாய்ப்பு கிடைத்ததா? - திருச்செல்வம் ஓபன் டாக்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியல். சமூகத்தின் ஆணாதிக்கம் கொண்டவர்களிடம் சிக்கிக்கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள், பெண் அடிமை போன்ற விஷயங்களை காட்டும் விதமாக அமைந்துள்ளது 

ஆதிரை திருமண பரபரப்பு முடிந்து இப்போது சொத்து பிரச்சனை வந்துள்ளது. ஜீவானந்தத்தை அழிக்க குணசேகரன் படு பிளான் போட்டிருக்கிறார்.ஜீவானந்தம் ஒருபக்கம் தனது பழைய காதல் கதையை நினைவுப்படுத்தி வருகிறார்.

கதையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை காண மக்களும் ஆவலாக தான் உள்ளனர்.

சீரியலில் குணசேகரன் வில்லனாக ஸ்கோர் செய்தாலும் அவரையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அமைந்தது தான் நந்தினி கேரக்டர். அவ்வப்போது இடையில் காமெடி செய்து மக்களின் பேவரெட் கதாபாத்திரமாக இருந்து வருகிறார்.

இவரை சன் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் திருச்செல்வம் சந்தித்துள்ளார். அப்போது அதில் காமெடி சீன் ஒன்றுக்கு ஹரிப்பிரியா பயங்கரமான ஒரு ரியாக்ஷன் கொடுத்திருந்தார். 

அப்போது அவரைப் பற்றி விசாரித்தேன், அவரும் ஓகே சொல்ல இந்த நந்தினியாக இப்போது நடித்து வருகிறார் என்றார்.இப்படி தான் அவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


Advertisement

Advertisement