• Sep 21 2023

நடிகை நீலிமா ராணி குழந்தை பிறந்த பின்னர் உடல் எடையை இப்படித்தான் குறைத்துக் கொண்டாரா?- டயட் சீக்ரெட் இது தானா?

stella / 1 month ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நீலிமா ராணி. இதையடுத்து ஜெயம் ராஜா இயக்கிய சந்தோஷ் சுப்ரமணியம், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா, ஜோதிகா நடித்த மொழி உள்பட ஏராளமான திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தார் .

சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், நீலிமாவுக்கு பெயரை பெற்றுத்தந்தது சின்னத்திரை சீரியல்கள் தான். சின்னத்திரையில் 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள நீலிமாவுக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். குறிப்பாக இவர் வில்லியாக நடித்த தொலைக்காட்சி தொடர்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தன. 


மெட்டி ஒலி, கோலங்கள், அரண்மனை கிளி, வாணி ராணி போன்ற தொடர்களில் நீலிமாவின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டன.நடிப்பைத் தாண்டி தொகுப்பாளினியாகவும் தன் திறமையை காட்டியுள்ள நீலிமா, 2008-ம் ஆண்டு இசைவானன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அண்மையில் இவருக்கு 2வது குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரிந்தது தான்.

 அந்த குழந்தைக்கு பிறகு உடல் எடையை குறைக்க அதிக கீரைகள் மற்றும் பச்சை காய்கறிகளை எடுத்துக் கொண்டாராம்.அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் வேக வைத்த உணவுகளை தான் அதிகம் சாப்பிட்டாராம்.


அதேபோல் எடை குறைக்க உதவும் விதைகள் ஆளி விதை, சூரிய காந்தி விதை, பூசணி விதை, எள்ளு மற்றும் சியா விதைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வாராம்.செம்பருத்தி டீ, பிளாக் காபி மற்றும் கிரீன் டீ போன்றவற்றை தான் தினமும் குடிப்பாராம். இவ்வாறு தான் தனது உடல் எடையை குறைத்துக் கொண்டாராம்.

Advertisement

Advertisement

Advertisement