• Jan 18 2025

நம்ம விஜய்க்கு இப்படியொரு செல்லப்பெயரா? ரொம்ப க்யூட்டா சொல்றாங்களே..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக  வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் வசூலில் மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

தற்போது நடிகர் விஜய் படங்கள் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும் படங்களாகவே மாறிவிட்டது. குறிப்பாக குழந்தைகள் விரும்பும் நடிகராக இருக்கிறார் விஜய். 

இந்த நிலையில் விஜய்க்கு ஒரு செல்லப் பெயர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சமையல் நிகழ்ச்சிக்காக விஜயின் அம்மாவை அழைக்க சென்ற தொகுப்பாளருக்கு விஜய்யின் செல்லப்பெயர் தெரியவந்துள்ளது.


அதன்படி, குறித்த பேட்டியில் விஜய்யின் அம்மா, விஜய்க்கு சர்க்கரை பொங்கல் மிகவும் பிடித்தமான இனிப்பு உணவு என்று கூறும்போது, விஜய்கிட்ட நாங்க பேச முடியுமா என  தொகுப்பாளர் கேட்க, அந்த நிகழ்ச்சியில் இருந்து கொண்டே ஷோபா விஜய்க்கு போன் செய்தார்.

உடனே ஷோபா விஜயை 'ஜோ எங்கம்மா இருக்க? ஷூட் ல இருக்கியா' என பேச்சை ஆரம்பித்தார். இதிலிருந்தே விஜயை ஷோபா ஜோசப் விஜய் என்பதை செல்லமாக 'ஜோ' என்று அழைப்பதாகவே தெரிகிறது.

Advertisement

Advertisement