• Feb 22 2025

வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ..!விவகாரத்தில் புதிய திருப்பமா..?

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

அண்மைக்காலங்களாக தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் விவாகரத்து செய்வதனை ஒரு பேஷனாக செய்து வருகின்றனர் அந்தவகையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது மனைவி சாயிராவினை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.மற்றும் அவரது பெண் bassist உம் விவாகரத்து குறித்து அறிவித்திருந்தமையினால் இருவரும் இணையவுள்ளனர் என போலி தகவல்கள் சமீபத்தில் பரவி வந்தது.


இதனை தொடர்ந்து தற்போது இவர் தனது விவாகரத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவிய உண்மைக்கு புறம்பான மற்றும் அவதூறான தகவல்களை கொண்ட வீடியோக்கள், செய்தி கட்டுரைகள் மற்றும் பதிவுகள் குறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


அவர், இந்த அவதூறு பதிவுகள் மற்றும் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். "இந்த வகையான தகவல்களால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது" என ரஹ்மான் கூறியுள்ளார். மேலும், அவற்றை நீக்காதபட்சத்தில், சட்டப்பூர்வமாக வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை அளித்துள்ளார்.

Advertisement

Advertisement