• May 27 2026

ரவி மோகன் மனதில் இன்னும் கெனிஷா தானா..? பழனியில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து, தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய நடிகர்களில் ஒருவர்தான் ரவி மோகன். இவர் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் இவருடைய நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறின.

காதல், எமோஷனல், தந்தை - தாய் உறவை வெளிப்படுத்தும் கதைகள் மட்டுமின்றி, காமெடி ஜானரிலும் இவர் நடித்த படங்கள் அமோக வரவேற்பைப் பெற்றன. அதேபோல் ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்துக் கலக்கியுள்ளார்.

ரவி மோகன் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்தார். அதன்படி, தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அவருடைய வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

அதே நேரத்தில், ரவி மோகன் தனது தோழியான பாடகி கெனிஷாவுடன் பொது இடங்களுக்கு செல்வது, சுற்றுலா செல்லுவது என பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டதால் சர்ச்சைகளில் சிக்கினார்.


இதற்கிடையில், “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்துள்ளார். அதில் Yogi Babu உள்ளிட்ட நடிகர்களை வைத்து பல படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இவர்களுடைய குடும்ப விவகாரம் பெரும் பரபரப்பாக மாறிய நிலையில், “நான் இனி ரவி விஷயத்தில் தலையிட மாட்டேன். அவரை விட்டுச் செல்கிறேன்” என்று கெனிஷா விலகிச் சென்றதாக தகவல்கள் வெளியானது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத ரவி மோகன், அடுத்த நாள் பிரஸ் மீட்டை கூட்டி, “கெனிஷாவை காலி பண்ண வைத்துட்டீங்க. உங்களை சும்மா விட மாட்டேன். நான் ஆர்த்தி வீட்டில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்குத்தான் தெரியும்” என்று கண்கலங்கியபடி பேசியிருந்தார்.

அது மட்டுமின்றி, விவாகரத்து வழக்கு முடிவு பெறும் வரை படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் அவர் பழனிக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில், பழனி முருகன் கோவிலில் வைத்து கெனிஷாவின் மிதுன ராசிக்காக அர்ச்சனை செய்துள்ளார். தற்போது அவர் கெனிஷா பெயருக்கு அர்ச்சனை செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement