தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் பல பாகங்களை கடந்து வந்தாலும் பேய் படங்களுக்கென்றே தனி வரவேற்ப்பு உள்ளது என்றே கூறலாம் . அவ்வாறே இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றிநடை போட்ட காஞ்சனா திரைப்படம் குறித்து அடுத்த தகவல் கசிந்துள்ளது.
காஞ்சனா 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதில் ராகவா லாரன்ஸ், சரத்குமார் லக்ஷ்மி ராய், கோவை சரளா,தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் பயம் கலந்த நகைச்சுவை படமாக காணப்பட்டதுடன் மூன்று பாகங்கள் வரை வெளியாகியுள்ள இருந்தது.
இந்த நிலையிலேயே இதன் அடுத்த பாகமான காஞ்சனா பாகம் நான்கு தயாராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பெரும்பாலும் இதன் படப்பிடிப்பானது வருகின்ற செப்டம்பர் மாதம் ஆரம்பமாக வாய்ப்புள்ளது. மேலும் ராகவா லாரன்ஸ் குறித்த படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்கின்றார்.
Listen News!