• Sep 21 2024

இந்த வாரம் கெத்து காட்டியது சன் டிவியா? விஜய் டிவியா? வெளியான TRP ரேட்டிங் லிஸ்ட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கில் முதலாவது இடத்தை தக்க வைத்துள்ளது. 

இதுவரை காலமும் சன் டிவி சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வந்த நிலையில், விஜய் டிவி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் படிப்படியாக முன்னேறி முதலாவது இடத்தை தற்போது தக்க வைத்துள்ளது.

இந்த நிலையில், இந்த வாரம் இடம்பெற்ற டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் ஐந்து இடங்களை பெற்ற சீரியல்களின் நிலவரத்தை  பார்ப்போம்.


அந்த வகையில் இந்த வாரமும் சிறகடிக்க ஆசை சீரியல் முதலாவது இடத்தை பெற்றது. இரண்டாவது இடத்தில் சன் டிவி சீரியலான சிங்க பெண்ணே சீரியலும் மூன்றாவது இடத்தில் கயல் சீரியலும் காணப்படுகின்றது.

இதை தொடர்ந்து நான்காவது இடத்தில் சன் டிவி சீரியலான மருமகள் சீரியலும் ஐந்தாவது இடத்தில் விஜய் டிவி சீரியலான பாக்கியலட்சுமி சீரியலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement