• Jan 19 2025

மீண்டும் சீரியலில் நடிப்பது உண்மையா? பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் கூறிய அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் மீண்டும் ஒரு சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து அவரே சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

’பகல் நிலவு’ உள்ளிட்ட ஒரு சில சீரியல்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அசீம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியிலும் பிரபலமானார் என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு நெகட்டிவ் இமேஜ் கிடைத்தாலும் இறுதியில் அவர் டைட்டில் பட்டம் வென்றவுடன் அவருக்கு ஆதரவு குவிந்தது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து அவர் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் அசீம் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரபலம் ஒருவரிடம் இந்த தகவலை மறுத்துள்ளார். மீண்டும் சீரியலில் நடிக்கும் ஐடியா சுத்தமாக இல்லை என்றும், சீரியலில் நான் நடிப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் அனைத்தும் வதந்தி என்றும் நான் திரைப்படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் நான் நடித்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இன்னும் இரண்டு படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், எனவே சீரியல் பக்கம் மீண்டும் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அசீம் சீரியலில் நடிக்க உள்ள இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement