• Sep 13 2024

அந்த சீனில் மாதுரி தீட்சித்தை உள்ளாடையை கழட்ட சொன்னேன்..அமிதாப் படத்தில் நடந்த சம்பவம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடிகைகள் வெறும் ஜாக்கெட் உடன் நடிப்பது டவல் கட்டிக் கொண்டு நடிப்பது, பாவடை கட்டிக் கொண்டு நடிப்பது, வெறும் உள்ளாடையுடன் நடிப்பது, உச்சகட்டமாக நிர்வாணமாகவே நடிப்பது என பல படங்களில் போல்டான நடிப்பை படத்தின் கதைக்கு ஏற்ப நடித்து வருகின்றனர்.


இப்படி அமிதாப் பச்சனை வைத்து டினு ஆனந்த் இயக்கிய சனாகத் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் வில்லன்களால் ஹீரோ அமிதாப் பச்சன் கயிற்றில் கட்டப்பட்டு இருக்க அவரை வில்லன்களிடம் இருந்து காப்பாற்ற மாதுரி தீட்சித் தனது ஜாக்கெட்டை கழட்டி விட்டு வெறும் பிராவுடன் நிற்க வேண்டும் என்கிற சீன் தான் அந்த படத்தின் முதல் நாளாகவே படமாக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது இதில் நடந்த சம்பவத்தை பற்றி இயக்குநர் கூறியுள்ளார்.


இதற்காக முன்னதாகவே இந்த காட்சியை படத்தில் அந்த நடிகையை ஒப்புதல் செய்வதற்கு முன்னதாகவே தெளிவாக கூறிவிட்டேன். மேலும் நீங்கள் அணிந்திருக்கும் பிரா எந்த டிசைனில் எப்படி இருக்க வேண்டுமோ அதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம் உங்கள் காஸ்ட்யூம் டிசைனர் வைத்தே அந்த உள்ளாடையை உருவாக்கி அணிந்து கொண்டு வரலாம் அதில் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டேன் .

எல்லாவற்றிற்கும் சம்மதம் தெரிவித்து நடிகை மாதுரி தீட்சித் படத்தின் முதல் நாள் சூட்டிங்கின் போது தனது மேக்கப் ரூமில் இருந்து வெளியே வரவே இல்லை. உதவியாளரை அனுப்பி என்ன பிரச்சனை என்று கேட்டு வர சொன்னேன். மாதுரி தீட்சித்திடம் பேசிவிட்டு வந்த உதவியாளர் இந்த காட்சியில் நடிக்க அவர் முடியாதென மறுத்து விட்டார் என்றார்.


அதன் பின் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த நடிகர் அமிதாபச்சன் பிரச்சனை என்ன என்பதை விசாரித்து இருவருக்கும் இடையே சமரசம் செய்து இன்னைக்கு அவருக்கு வேண்டாம் என்றால் அந்த காட்சியை மாற்றி விடலாமே எனக்கூறி அப்படி அந்த காட்சியை மாற்றிவிட்டனராம்..அது அந்த நாட்களில் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement