• Sep 22 2023

களை கட்டிய ஜவான்... விழாக்கோலம் பூண்ட திரையரங்குகள்... ரசிகர்கள் கொடுத்த பலத்த வரவேற்பு.. வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

அட்லீ இயக்கத்தில் இன்றைய தினம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள படம், ஜவான். இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ளார், மேலும் இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.   


அத்தோடு விஜய் சேதுபதி இதில் ஷாருக்கானுக்கு வில்லனாக வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரியாமணி, சான்யா மல்கோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுல்லாது அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 


இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஜவான் படத்திற்குப் பலத்த வரவேற்பை கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் ஆந்திரா, தெலங்கானா மாவட்டங்களிலும் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.


அதாவது கட்-அவுட் உயரத்திற்கு ஷாருக்கானின் மனித பிரமிடை உருவாக்கி கொடி அசைத்துக் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதேபோன்று சென்னையிலும் ஷாருக்கின் பெரிய கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement