• May 04 2024

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர்.

பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் இப்படமும் பலரிடமும் நல்ல விமர்சனங்கள் பெற்றுவருகின்றது.

3வது நாளே படம் நல்ல ஹிட்டடிக்க படக்குழு தேவி திரையரங்கிற்கு சென்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.

அங்கேயே கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினார்கள்.

எனினும் தற்போது வசூலில் கலக்கிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ. 23 கோடி வசூலித்துள்ளதாம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement