• Nov 15 2025

சமுத்திரக்கனி – பரத் கூட்டணியில் "வீரவணக்கம்"...!படக்குழு அறிவித்த முக்கிய அறிவிப்பு..!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் வி. நாகேந்திரன் தன்னுடைய இயக்கத்திறமையை தமிழ்திரைப்பட உலகிற்கும் கொண்டு வருகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் தமிழ்படம் "வீரவணக்கம்", சமூக உணர்வுகளை மையமாக கொண்டது. இதில் சமுத்திரக்கனி மற்றும் பரத் முதன்முறையாக ஒன்றாக இணைந்து முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. நம் சமகால சமூகத்தில் நடைபெறும் அவலங்கள், மாற்றத்தை தேடி போராடும் சாதாரண மனிதர்களின் குரல்கள், மற்றும் கடந்த கால புரட்சி நிகழ்வுகள்


இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை சுரபி லக்ஷ்மி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பும், கதையின் வலிமையும் சமீபத்தில் நடைபெற்ற பிரத்தியேகக் காட்சியில் பார்வையிட்ட பல பிரபலங்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

சமூக நோக்குடன் உருவாகியுள்ள "வீரவணக்கம்" திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் திரையுலகில் ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement