தமிழ் சினிமாவில் உள்ள மாஸ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் ஆரம்பத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான சண்டைக் கோழி ,தாமிர பரணி ,திமிரு, பூஜை ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றிருக்கின்றது.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய வீரமே வாகை சூடும் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும் இவர் தென்னிந்திய சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் நடிகர் சங்கப் பொருளாளர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஷால்.
இந்த நிலையில் விஷால் அளித்த பேட்டி வீடியோ ஒன்று திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அஜித்திடம் பிடிக்காத விஷயம் எது என கேட்க அதற்கு ஓப்பனாக பதில் அளித்துள்ளார் விஷால்.
அதாவது அஜித் Unavailable ஆக இருப்பதுதான் பிடிக்காது. மேலும் நாங்கள் எல்லோரும் ஒரே துறையில் இருந்தாலும் அவரை ரீச் செய்வது என்பது முடியாத விஷயம். ஒரு விஷயத்திற்காக அவரை சந்திக்க வேண்டுமென அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களை தொடர்பு கொண்டால் அஜித் அவர்களை சந்திக்க முடியவில்லை என கூறுவார். அவர் இப்படி இருப்பது தான் பிடிக்காது என தெரிவித்துள்ளார்.
விஷாலின் இந்த பேச்சுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் விஜய் ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்து வருகிறது.
பிற செய்திகள்
- ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் பாக்கியலட்சுமி கோபி… வைரலாகும் வீடியோ…!
- முன்னாள் அமைச்சருக்கு எதிராக நடிகை அளித்த புகார்:வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!
- பிரபுதேவா போலவே இருக்கும் அவரது மகன் -இப்படி வளர்ந்திட்டாரே… வைராகி வரும் புகைப்படம்..!
- இரண்டு வாரத்திலும் வசூல் மழையில் நனையும் அருண் விஜய்யின் யானை
- மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் விக்ரம்!
- சமூக ஊடகங்களில்
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!