• Jan 19 2025

பிரபல நடிகரின் கட்சிக்கு எண்ட் கார்டு.. மனைவியிடம் கேட்டு பாஜகவில் கட்சியை இணைத்த சரத்குமார்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கி அதன் பின் 17 ஆண்டுகளாக நடத்தி வந்த நிலையில் இன்று திடீரென அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார்.

சமீபத்தில் நடிகர் சரத்குமார் தனது கட்சி பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்த நிலையில் அந்த கட்சியில் இருந்து அவர் ஒரு சில தொகுதிகளை பெற்று போட்டியிடுவார் என்று கூறப்பட்டது.

குறிப்பாக சரத்குமார் திருநெல்வேலியிலும் அவரது மனைவி நடிகர் ராதிகா விருதுநகர் தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென சரத்குமார் சற்றுமுன் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

சரத்குமார் கட்சி இணைந்ததை வரவேற்றுள்ள அண்ணாமலை அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அடுத்து 17 ஆண்டுகளாக அரசியல் கட்சி நடத்தி வந்த சரத்குமார் பாஜகவோடு ஐக்கியம் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் தான் தனது மாமியார் என்னை எப்போது முதல்வராக பார்ப்போம் என்று ஏக்கத்துடன் கூறியதாக சரத்குமார் பேசிய நிலையில் இன்று அவர் திடீரென பாஜகவில் இணைந்து விட்டதால் இனி முதல்வர் கனவு என்பது கனவாகவே இருந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்   பாஜகவுடன் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்த சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் இனி பாஜகவை மாநில அளவில் வளர்ப்பதே தனது கடமை என்றும் கூறினார். இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு கட்சி இன்று முதல் காணாமல் போய் பாஜகவுடன் ஐக்கியம் ஆகிவிட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement