• Mar 29 2025

பூகம்பமாய் வெடித்த ராதிகா,ஈஸ்வரி சண்டை! மாமியார் மருமகள் சண்டையில் மாட்டிய கோபி! Baakiyalakshmi promo

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது ரொம்ப விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதில் என்ன நடைபெறுகிறது என பார்ப்போம் வாங்க.


ராதிகா மற்றும் கோபி சண்டை போடுவது பார்த்த இனியா தனது பாட்டியிடம் சென்று இப்படி அப்பாகிட்ட ராதிகா சண்டை போடுறாங்க என்று சொல்கிறார். இதனால் கோவப்பட்ட கோபியின் அம்மா ராதிகாவை அழைத்து ராதிகா எதுக்காக கோபி கிட்ட சண்டை போடுற என்று கேட்கிறார். 


அதற்கு ராதிகா உங்க வளர்ப்பு சரியா இருந்து இருந்தா நான் ஏன் சண்டை போடப்போறேன் என்று கூறுகிறார். நீங்க பாக்கியவிடம் சண்டை போடுவதை பார்க்க நான் கோபியிடம் சண்டை போடுவது எல்லாம் ஒண்ணுமே இல்ல என்று கூறுகிறார். 


இப்படி இருவரும் வாக்குவாதம் செய்யும் போது ஈஸ்வரி இதுக்கு மேல எதாவது பேசினா நான் பத்திரகாளியாகிருவன் என்று கூறுகிறார். அதனிடையில் வந்த கோபி அம்மா ராதிகாகிட்ட சண்டை போடாதீங்க. எங்க குடும்ப விஷயத்துல தல போடாதீங்க அவ என் மனைவி நான் அவ சொல்லுறத கேக்கத்தான் வேணும் என்று கூறுகிறார்.  

Advertisement

Advertisement