• Jan 19 2025

மெலோடி குயின் ’ஸ்ரேயா கோஷலின் ’ பிறந்தநாள்!.....பிரபல நடிகர் கொடுத்த சர்ப்பிரைஸ் .. வாய் அடைத்து போன ரசிகர்கள் ...

Kamsi / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் பாடல்கள் பாடியிருக்கும் அதிசய குரல் அழகி  ஸ்ரேயா கோஷலின் பிறந்த நாள் இன்று .  வெகு விமர்சையாக பிறந்த நாளை கொண்டாடி கொண்டு இருக்கும் ’ஸ்ரேயா கோஷலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் . 


இம்மண்ணின் மறக்க முடியாத கவிஞர்களில் ஒருவரான நா.முத்துக்குமார், ’உன் பேரைச் சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம்’ எனும்  முத்துமுத்தான வார்த்தைகளைத் தன்னுடைய எழுத்தின் மூலம்  ’அங்காடித் தெரு’ திரைப்படத்தில்  வர்ணித்து  எழுதியுள்ளார் .இளசுகள் முதல் பெரிசுகள் வரை  பாடல்களைத் தேடித்தேடி, தன் ஃபேவரைட் பட்டியலில் சேமிக்கத் தொடங்கினர் . அந்த அளவுக்கு ஹிட் ஆன  இந்த பாடலின் புகழ்  கவிஞரை மட்டுமல்ல, அதைப் பாடிய பெண் குரலின் பேரையும் சொல்லவைத்ததுதான் அதிசயம். 


ஒவ்வொரு  பாடலையும் ‘உருகுதே... மருகுதே’ என ரசிகர்களை உருகவைக்கும் அளவுக்குப் பாடிவரும் ஸ்ரேயா, பாலிவுட்டில் ஏற்கெனவே பாடல்கள் பாடி அறிமுகமாகி இருந்தாலும், தமிழில் வெளியான ‘ஆல்பம்’ படமே, அவருக்கு திருப்பத்தை  கொடுத்தது .  ‘செல்லமே.. செல்லமே’ என அவர் தொடங்கிய அந்தக் குரல், இன்றுவரை, ‘அம்மாடி... அம்மாடி’ என அவரைப் பேசவைக்கும் அளவுக்கு உச்சத்திற்குக் கொண்டு சென்றது. 


தடைகள் எதுவாயினும், தடங்கள் மூலம் சரிசெய்யலாம் என்ற பாணியில், தமிழ் மொழி அவருக்குத் தெரியாதபோதும், அந்த தமிழ் மொழியிலேயே தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டவர் ஸ்ரேயா.மண்ணுக்குள் வைரம் இருந்தால் மதிப்பு இருக்காது. அது, வெளியில் வரும்போதுதான் உலகமே பிரமிக்கிறது. அந்த அளவுக்கு தனது காந்த குரலால் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கும் ஸ்ரேயா கோஷல் இன்றைய தினம் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார் . 

Advertisement

Advertisement