• Mar 16 2026

மீண்டும் இணையும் மாசான டீம்! சூப்பரான சம்பவம் இருக்கு போலயே! வைரல் புகைப்படம் இதோ...

shali / 2 years ago

Advertisement

Listen News!

 'மாமன்னன்' படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கொடுத்த மாரி செல்வராஜ். தற்போது அடுத்ததாக நடிகர் துருவ் விக்ரமினை வைத்து புதிய படம் ஒன்றினை இயக்கவுள்ளார்.


இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளிவந்திருந்தது. இந்நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் டீம் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது.  இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படத்தினை  ஸ்போர்ட்ஸ் பயோபிக்கை தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது.


மாரி செல்வராஜ் இயக்கத்தில், முன்னாள் கபடி வீரரும் அர்ஜுனா விருது பெற்றவருமான பி.கணேசன் என்ற மானாதி கணேசனை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் தொடர்பான அப்டேட் நியூஸ்கள் இனி வரும் காலங்களில் வெளியாகும்.

  

Advertisement

Advertisement