• Apr 01 2025

’சிறகடிக்க ஆசை’: ஒரே ஒரு நாள் பாடுவதற்கு 3 நாட்கள் டிரைனிங் எடுத்த சுந்தர்ராஜன்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசைசீரியலில் இன்றைய எபிசோடில் மீனா தனது குழுவினர்களுடன் மாலை கட்டிக் கொண்டிருக்கும் நிலையில் எல்லோரும் பாட்டு பாடும் காட்சி இருக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பாட்டு பாடிக்கொண்டே மாலைகள் கட்டினால் வேலையின் சோர்வு தெரியாது என்று ஸ்ருதி ஐடியா கொடுக்க உடனே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாட்டை பாடுகின்றனர்.

முதலில் மீனாமல்லிகை என் மன்னன் வழங்கும்என்ற பாட்டை பாட, அதனை அடுத்து முத்துரோசாப்பூ சின்ன ரோசாப்பூஎன்ற பாடலை பாடுகிறார். இதனை அடுத்து ரவிஊதா ஊதா ஊதாப்பூஎன்ற பாடலை பாட, அதன் பிறகு பூ கட்டும் பெண்கள்செந்தூரப்பூவே செந்தூரப்பூவேஎன்ற பாடலை பாடுகின்றனர். இதையடுத்து ஆர் சுந்தரராஜன்பூ மாலையில் ஓர் மல்லிகைஎன்ற பாடலை பாட அதற்கு அடுத்து விஜயாமல்லிகைப்பூ வச்சு வச்சுஎன்ற பாடலை பாடுகிறார்.

இந்த நிலையில்சிறகடிக்க ஆசைசீரியல் குழுவினர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சுந்தர்ராஜன் பாடிய பாடல் குறித்த தகவலை கூறியுள்ளனர். முதலில் சுந்தர்ராஜன் தனக்கு பாட வராது என்றும் தனது குரல் கரகரப்பாக இருப்பதால் பாட்டு பாட தான் விரும்பவில்லை என்று கூறியதாகவும் ஆனால் இயக்குனர் மற்றும் சீரியல் குழுவினர்நீங்கள் கண்டிப்பாக பாடியே ஆக வேண்டும், உங்களால் முடிந்த அளவு பாடுங்கள்என்று வலியுறுத்தியதை அடுத்து அவர் வீட்டில் மூன்று நாள் பயிற்சி எடுத்து பாடியதாகவும் முத்து கேரக்டரில் நடித்த வெற்றிச்செல்வன் கூறியுள்ளார்.

வீட்டில் பயிற்சி எடுத்திருந்தாலும்  டப்பிங் தியேட்டரில் ஒரு முறை இயக்குனரிடம் பாடி காட்டிஇது ஓகே என்றால் ரெக்கார்டிங் செய்து கொள்ளுங்கள், இல்லை என்றால் டப்பிங்கில் யாரையாவது பாட வைத்துக் கொள்ளுங்கள்என்று சுந்தர்ராஜன் சொல்ல இயக்குனர் 'இது டபுள் ஓகே நீங்கள் தாராளமாக பாடலாம்என்று  சொன்னதாக வெற்றிச்செல்வன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதுவரை சுந்தரராஜன் தான் நடித்த மற்றும் இயக்கிய படங்களில் கூட பாட்டு பாடியதில்லை என்ற நிலையில்சிறகடிக்க ஆசைகுழுவினர் அவரை முதன்முறையாக இரண்டு லைன்கள் பாட வைத்தது உண்மையிலேயே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement