• Apr 03 2025

துரோகம் செய்த காதலனுக்கு கிரண் ரதோட் செய்த தரமான செயல்! என்னமா இப்படி பண்ணிட்டிங்க!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கிரண். முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் கலக்கினார், மிகவும் பப்ளியாக இருந்த இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி இருந்தனர். 


பின் பிரசாந்த், அஜித், விஜயகாந்த், கமல் என்று நிறைய முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்தார். வரிசையாக அவர் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி என்றாலும் ஒரு கட்டத்தில் இவரை சினிமா பக்கமே காணவில்லை. பின் திடீரென்று இன்ஸ்டா பக்கத்தை திறந்து கவர்ச்சி நடிகையாக போட்டோ ஷுட்கள் வெளியிட்டு வந்தார்.


இந்த நிலையில் நடிகை கிரண், ஷகிலாவோடு ஒரு பேட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். அதில் அவர் பேசும்போது, பீச்சில் இருப்பதான் ரொம் பிடிக்கும், அதனால் கோவாவில் செட்டில் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ளார்.திருமணம் பற்றி பேசும்போது, என்னுடைய வேலை, கெரியர் எல்லாம் முடிந்த பிறகு எப்படியாவது இந்த வருடம் திருமணம் செய்து கொள்வேன். 


நான் ஒரு நபரை காதலித்தேன், அவருக்காக தான் சினிமாவை விட்டு வந்தேன். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டார், அதோடு அவர் என்னை அடித்துவிட்டார். அதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதனால் அவரை ஒரு முறை வீட்டிற்கு வரவைத்து நானும் அடித்து ஆடைகளை அவிழ்த்து ரோட்டில் ஓட விட்டேன் என்று கிரண் பேசி இருக்கிறார். 

Advertisement

Advertisement