• Sep 20 2024

ஏதாவது பொண்ணோட தொடர்பு இருக்குமோ?.. எங்க விஜய் அண்ணாவை பார்த்து நீக்க எப்படி அப்படி சொல்லாம்... ரசிகர்கள் அதிருப்தி

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

கோட் திரைப்படம் செப்டெம்பர் 5ம் திகதி வெளியாக இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கோட் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரெய்லர் விஜய் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 


விஜய் அண்ணாவை இரண்டு வேடங்களில் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. சினேகா, லைலாவை எல்லாம் பார்க்கும்போது பழைய படங்கள் நினைவுக்கு வருகிறது. மைக் மோகன் மிரட்டியிருக்கிறாரே என விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் கோட் ட்ரெய்லரில் விஜய்யை பற்றி சினேகா பேசியது தளபதி ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. 


"பேபியை நினைச்சு டென்ஷன் இல்ல, காந்திய நினைச்சு தான் டென்ஷன்". இப்பலாம் ஆலூஃபா சுத்திக்கிட்டு இருக்கிறார், வீட்டுக்கும் டைமுக்கு வருவது இல்லை. ஏதாவது பொண்ணோட தொடர்பு இருக்குமோனு கொஞ்சம் சந்தேகமா இருக்கு என்பார்". அதற்கு விஜய் சிரிப்பது போன்று காட்டியிருப்பார்கள். படம் தான் என்றாலும் கூட விஜய்ணாவை போய் நீங்க சந்தேகப்படலாமா வெங்கட் பிரபு?.இது தான் நீங்கள் விஜய்ணா மீது வைத்திருக்கும் மரியாதையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதற்கிடையே கோட் ட்ரெய்லரை பார்க்கும்போது அஜித் குமாரின் மங்காத்தா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படங்கள் நினைவுக்கு வருகிறது என்கிறார்கள் சினிமா ரசிகர்கள். சத்தியமா இனி குடிக்கவே கூடாது என மங்காத்தாவில் அஜித் சொன்ன அதே வசனத்தை பேசியிருக்கிறார் விஜய். மேலும் விஜய் பேசும் வயசாயிடுச்சு வசனத்தை பார்த்தால் படையப்பாவில் ரஜினிகாந்த் பேசும் வசனம் நினைவுக்கு வருகிறது. என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். யாருடைய கதையும் அல்ல இது வெங்கட் பிரபுவின் கதை என ஊடகங்கள் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். 

Advertisement

Advertisement