• Apr 26 2024

இந்திய அணியை வீழ்த்தினால் நான் திருமணம் செய்து கொள்வேன்... ட்விட்டரில் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல நடிகை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஆரம்பமாகி தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் இரு குறூப்பாக விளையாடி வரும் . இப்போட்டியானது தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அரையிறுதி போட்டிக்காக பல அணிகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் குறூப் 2வில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே 3 போட்டிகளில் 2 தோல்வி 1 வெற்றியில் இருப்பதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை பெறுவதற்கு மதில்மேல் பூனை இருப்பது போல் இருக்கிறார்கள். இந்நிலையில் இன்று பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

அதுமட்டுமல்லாது இந்திய அணி 4 போட்டியில் ஒரு தோல்வி என 3 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது. அத்தோடு கடைசிப் போட்டியாக ஜிம்பாப்வே அணியுடன் மோதவிருக்கிறது இந்திய அணி. 


இதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஷெகர் ஷின்வாரி ஒரு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றினைப் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

அதாவது இந்தியாவை தோற்கடித்தால் ஜிம்பாப்வே நபரை நான் திருமணம் செய்வேன் என்று கூறி அந்தப் பதிவினூடே சவால் விட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த இந்திய ரசிகர்கள் "காலம் பூராகவும் அப்போ சிங்கிள் ஆகத் தான் இருக்க வேண்டும்" எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement