• Dec 10 2022

விக்ரமனை உருவக்கேலி செய்த மகேஸ்வரி: திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்..!

Listen News!
Aishu / 1 month ago
image
Listen News!

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விக்ரமனை வி.ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இடையே ஒற்றுமையே இல்லை. எனினும் அதே சமயம் தேவைப்பட்டால் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள்.முன்னதாக திருநங்கை ஷிவின் கணேசனை கிண்டல் செய்தார் அசீம். ஷிவினை போன்று சைகை செய்து கலாய்த்து இருந்தார்.

இவ்வாறுஇருக்கையில்  விக்ரமனை உருவக்கேலி செய்திருக்கிறார் வி.ஜே. மகேஸ்வரி. அதை கேட்டு மைனா நந்தினி நக்கலாக சிரித்த வீடியோவை பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

வி.ஜே. மகேஸ்வரி ரொம்பவே மாறிவிட்டார். எதற்கெடுத்தாலும் கத்துகிறார். உருவக் கேலி எல்லாம் செய்தால் அடுத்த பாயாசம் மகேஸ்வரிக்கு தான் என்று கூறி வருகிறார்கள்.மைனா நந்தினியிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டை டிவி சேனலாக மாற்றியிருக்கிறார்கள். அந்த டிவி, இந்த டிவி என்று இரண்டு சேனல்கள். இந்நிலையில் அந்த டிவி சார்பில் டேலண்ட் ஷோ நடத்தியிருக்கிறார்கள்.



எனினும் அது தொடர்பான ப்ரொமோ வீடியோவில் பார்வையாளர்களை கவர்ந்தது விக்ரமன் தான். அவர் துடி துடித்து விழுவது போன்று காட்டியிருக்கிறார்கள்.அத்தோடு மனிதக் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி இறக்கும் தீமை தான் விக்ரமன் தேர்வு செய்திருக்கிறார் போன்று. இதற்காக அவரை பாராட்டியே ஆக வேண்டும் என்று பிக் பாஸ் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.