சினிமா இசை உலகில் மெலடி பாடல்களால் மனங்களைக் கட்டிப்போட்டவர் பாடகர் கிரிஷ் (Krish). தற்காலிகமாக பின்தங்கியிருந்தாலும், அவரது பாடல்கள் இன்னும் பலரது மனங்களில் இடம் பிடித்துக் கொண்டே இருக்கின்றது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில், கிரிஷ் தனது பழைய அனுபவங்களை மிக நேர்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், அவர் தனது கடந்த கால வாழ்கையின் தவறுகளை ஒப்புக்கொண்டு, இன்றைய இளம் பாடகர்களுக்கு முக்கியமான அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அந்த உரையாடல் வெறும் பேட்டி அல்ல, இசை துறையில் திகழ விரும்பும் இளம் கலைஞர்களுக்கான ஒரு கண்ணோட்ட நெறிமுறை என்றே சொல்லலாம்.
அதன் போது கிரிஷ், "சினிமால நாம எப்படி நடந்துக்கிறோம்கிறது முக்கியம். இப்ப இருக்கிற சின்ன சின்ன பசங்க எல்லாம் ஒரு பாட்டு பாடினாலே திமிரு காமிச்சுக்கிட்டு, பிஸ்னஸ் கிளாஸில தான் போவேன்னு பந்தா பண்ணிட்டு இருக்காங்க...
நானும் ஓவரா ஆடினவன் தான். அப்புறம் சினிமாவே என்ன அடக்கி வைச்சது.. அதெல்லாம் பண்ணாம இருந்திருந்தா நானும் இன்னும் நிறைய பாடல் பாடியிருப்பேன்." என்று கூறியுள்ளார். இந்த கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!