விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்துகொண்ட 20 போட்டியாளர்களில் இறுதி வரை முன்னேறியவர்களில் ஒருவராக அரோரா இருந்தார். ஆரம்பத்தில் இவரைப் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் அதிகமாக இருந்தாலும், நிகழ்ச்சி முடிவில் பலரின் நம்பிக்கையைப் பெற்று முன்மாதிரியாக மாறினார்.
ஆரம்பத்தில், இன்ஸ்டாகிராமில் இவருக்கு 7.75 லட்சம் பின்தொடர்பவர்கள் (followers) இருப்பதாக, பிக் பாஸ் போட்டியாளராக அறிவிக்கப்பட்ட போது பலரும் “யார் இந்த அரோரா?” என்று அறிந்து கொள்ளத் தொடங்கினர்.
புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட இவர், சென்னையில் மாடலாக செயல்பட்டு வந்ததுடன், சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஆனால், அங்கீகரிக்கப்படாத டேட்டிங் ஆப்களை விளம்பரப்படுத்தியதன் மூலம் சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

மேலும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி மாடலாக அறியப்பட்ட இவர், பலரால் “பலூன் அக்கா” என அழைக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் இதனை அடிப்படையாகக் கொண்டு கேலி, கிண்டல்கள் செய்யப்பட்டன. பின்னர், அவரது உண்மையான தன்மை வெளிப்பட, இவர் மீதான ரசிகர்களின் பார்வை மாறியது.
பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகும், அவர் மாடலிங் மற்றும் குறும்படங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “நயன்தாரா போல என் வாழ்க்கையையும் படமாக எடுத்தால் எப்படி இருக்கும்? அதற்கு என்ன பெயர் வைக்கலாம்?” என தனது சப்ஸ்கிரைபர்ஸ்களிடம் கேட்டதாக தெரிவித்தார்.
அதற்கு ரசிகர்கள் “Untold Story of Air” என்ற டைட்டிலை சொன்னதாகவும், அதற்கு காத்து, பலூன் என அர்த்தம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது, இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!