• Apr 19 2026

டிவோர்ஸ் ஆகி அப்புறம் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.! முதன் முறையாக உண்மையை உடைத்த வனிதா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகையாக திகழ்ந்துவரும் வனிதா விஜயகுமார், எப்போதுமே தனது அதிரடியான கருத்துகளாலும் சவாலான பேச்சுகளாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகிறது.

சமீபத்தில் வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் அண்ட் மிசஸ்' திரைப்படம் சினிமா வட்டாரத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அந்தப் படத்தை அவரது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருந்தார். அதில் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அந்த படத்தின் மையக்கரு 40 வயதை கடந்த தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் உள்ள ஆசைகளும், அதற்காக அவர்கள் சந்திக்கும் சவால்களும் ஆகும். அதில் இடம்பெற்ற காட்சிகள் பலருக்கும் முகம் சுளிக்கும் வகையில் காணப்பட்டது.


இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், "தான் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கச் சென்றபோது என்னிடம் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார்கள். நானும் டிவோர்ஸ் பண்ணிட்டு அப்புறம் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு சொல்லிட்டேன்.

அதாவது நான் சினிமாவில் இருந்து விலகி கொஞ்சகாலம் இருந்ததை டிவோர்ஸ் பண்ணியதாக தெரிவித்தேன். அதற்கு பின்பு மீண்டும் சினிமாதான் என்னுடைய உலகம் என்று தோன்றியது. தற்போது சினிமாதான் என்னுடன் கடைசி வரை இருக்கப் போகிறது என்பதால் அதனை திருமணம் செய்துகொண்டுவிட்டேன்" என்று தெரிவித்தார்.

Advertisement

Advertisement