• May 18 2024

நீ விஜய் கூட நடித்த மூன்று திரைப்படங்களும் பிளாப் தான்,- ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த யோகிபாபு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது அயராத முயற்சியினாலும் நடிப்பினாலும் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முக்கிய நடிகராக வலம் வருபவர் காமெடி நடிகர் யோகிபாபு. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டும் இல்லாது ஷோலோ ஹீரோவாகவும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் இவர் தளபதி விஜய்யுடனும் சர்கார், மெர்சல், பிகில், பீஸ்ட் ஆகிய படங்களில் நடித்து இருக்கின்றார். இவர்களது காம்போவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மீண்டும் தற்பொழுது யோகி பாபு விஜய்யின் 66 வது படத்தில் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.

இதனை அதிகாரப்பூர்வமாக யோகி பாபுவே அறிவித்திருந்தார். இதனையடுத்து நெட்டிசன் ஒருவர் அந்த பதிவின் கீழ் ” நீ விஜய் கூட நடித்த மூன்று திரைப்படங்களும் பிளாப் தான், சர்கார் A.R.முருகதாஸ் அவுட், பிகில் அட்லீ அவுட், பீஸ்ட் நெல்சன் அவுட். அடுத்தும் தொடர்கிறது” என பதிவிட்டுள்ளார்.

அதற்கு மிகவும் கூலாக பதிலளித்துள்ள யோகி பாபு “Thankyou Pa” என செய்துள்ளார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் அந்த நெட்டிசனை திட்டி தீர்த்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement