• Jun 02 2024

'நான் ஜெயிக்கக் கூடாது என்று தான் நினைத்தேன்'- குக்வித் கோமாளியிலிருந்து இந்த வாரம் எலிமினேட் ஆனது இவரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 3 வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒரு போட்டியாளர் வெளியேறி வருகின்றார். இன்று நடந்த எலிமினேஷன் சுற்றில் வித்யூலேகா மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இருந்தனர்.கிரேஸ் மிக எளிமையாக பருப்பு போலி செய்தார், ஆனால் வித்யூலேகா வித்யாசமாக கேக், வழைப்பழம் வைத்து வித்தியாசமாக ஒரு டிஷ் செய்தார்.

இறுதியில் கிரேஸ் எலிமினேட் ஆனதாக நடுவர் அறிவித்தார். அதை கேட்டு அனைவரும் ஷாக் ஆனார்கள். பைனலுக்கு எளிதாக செல்வார் என எதிர்பார்க்கப்பட்டவர் இப்படி எலிமினேட் ஆகிவிட்டாரே என பலரும் வெளிப்படையாகவே கூறினார்கள்.

"நான் எலிமினேஷன் சுற்றுக்கு வந்திருக்க கூடாது, அப்படி வந்தால் ஜெயிக்க கூடாது என்று தான் நினைத்தேன். நான் ஜெயித்து, வித்யூலேகா எலிமினேட் ஆனால் நான் இன்னும் வருத்தப்பட்டு இருப்பேன்" என அவர் கூறிவிட்டு இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement