• May 18 2024

சிபிராஜ் நடிப்பில் உருவான மாயோன் திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியவர் தான் சிபிராஜ். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் தனக்கென ஓர் அடையாளத்தை இவர் உருவாக்கிக் கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘மாயோன்’. இந்தப்படத்தில் இவருடன் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வரும் ஜுன் மாதம் 24ம் திகதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடத்திற்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லரில் திகில் மற்றும் மர்ம காட்சிகள் நிறைந்து உள்ளதால் இந்த படம் அனைத்து தரப்பினரையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக 5 ஆயிரம் வருடத்திற்கு முந்தைய ஒரு பழங்கால கோவிலில் நடக்கும் மர்மமான விஷயங்கள் குறித்து இந்த படம் ஆய்வு செய்து படமாகி உள்ளது.

https://www.youtube.com/embed/yb-ZPxUV0t4

இந்த படம் சிபிராஜூக்குஅவருடைய திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement