• Jan 19 2025

பிரிய போகிறார்களா சரவணன் மீனாட்சி தொடரின் செந்தில் - ஸ்ரீஜா ஜோடி? அவர்களே சொன்ன அதிர்ச்சி தகவல்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சரவணன் மீனாட்சி’ சீரியலில் ஜோடியாக நடித்து அதன் பின் உண்மையாகவே ஜோடியாக மாறியவர்கள் செந்தில் - ஸ்ரீஜா என்பதும் இவர்கள் மிகவும் ஒற்றுமையாக ஒரு குழந்தையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நாங்கள் அடிக்கடி சண்டை போடுவோம், ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விடலாமா என்று கூட யோசித்தோம் என்றும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சரவணன் மீனாட்சி சீரியலில் மிகப் பொருத்தமான ஜோடி என்று கூறப்பட்ட செந்தில் மற்றும் ஸ்ரீஜா ஆகிய இருவரும் உண்மையாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதி கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் சமீபத்தில் தான் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும் தேவ் என்று பெயர் வைத்து அந்த குழந்தையை வளர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் செந்தில் - ஸ்ரீஜா இருவரும் சேர்ந்து அளித்த பேட்டியில் கல்யாணத்துக்கு பிறகு எங்களுக்குள் சின்ன சின்ன குழப்பங்கள் ஏற்பட்டது, சண்டையும் ஏற்பட்டது, காதலிக்கும் போது நல்ல நட்பாக இருந்த எங்கள் வாழ்க்கையில், கல்யாணத்துக்கு பிறகு தினமும் பிரச்சனை சண்டைகள் இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிந்து விடலாமா என்று கூட யோசித்தோம், ஆனால் அப்போதுதான் எங்கள் மகன் பிறந்தார், அதன் பிறகு எங்களுக்கு சண்டை போடவே நேரம் இல்லை, தற்போது இருவரும் சண்டை போட்டுக் கொண்டாலும் பிரிய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்படவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.

அது மட்டும் இன்றி எங்களுக்கு மட்டுமல்ல கல்யாணம் ஆன எல்லா ஜோடிகளுக்குமே முதல் மூன்று ஆண்டுகள் மிகவும் முக்கியமானது, அந்த காலத்தை கடந்து விட்டால் அதன் பிறகு பிரிவு என்ற பேச்சுக்கு இடம் இருக்காது, குறிப்பாக ஒரு குழந்தை பிறந்து விட்டால், அந்த மேஜிக்  நம்மை பிரிய விடாது’ என்று கூறியுள்ளனர். இந்த இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement