• May 18 2024

விக்ரம் படத்தில் டிரெண்டாகும் ‘சக்கு சக்கு வத்திகுச்சி’ பாடல் இந்த நடிகரின் படமா-தீயாய் பரவி வரும் தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமலின் விக்ரம் படம் நேற்றுமுன்தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்துள்ள இப்படம் பாஸிட்டிவ் விமர்சனங்களை ரசிகர்களிடத்தே இருந்து பெற்று வருகின்றது. மாஸ்டர் படத்தில் விட்டதையும் சேர்த்து லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் பிடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

விக்ரம் படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் படமாக உள்ளது. கதாப்பாத்திரங்கள் தேர்வு, ஸ்க்ரீன் ப்ளே, டிவிஸ்ட்டுகள், ஆக்ஷன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜின் ஆதிக்கமே உள்ளது. படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அத்தோடு படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் செதுக்கியுள்ளார் லோகேஷ் என சமூக வலைதளங்களில் பாராட்டு மழை குவிந்து வருகின்றது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம் பெற்ற பழைய பாடல் குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் படங்களில் பாடல்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை.

மாநகரம், கைதி படங்களில் பின்னணி இசை தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் கைதி, விக்ரம் படத்திலும் முக்கியமான கட்டத்தில் இரண்டு பழைய பாடல்கள் ஒலிக்கும். கைதி படத்தில் காவல் நிலையத்தை சுற்றி வளைத்த ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க ஜும்பலக்கா ஜும்பலக்கா, ஆசை அதிகம் வச்சு என்ற பாடல் ஒலிக்கும்.

மேலும் இதை தொடர்ந்து தற்போது விக்ரம் படத்தில் ஆரம்பத்தில் கமலின் காரில் சக்கு சக்கு வத்திக்குச்சி என்ற ஒலிக்கிறது. அத்தோடு இப் படம் பார்த்தவர்கள் இது என்ன பாடல்? எந்த படம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இந்த பாடல் அருண்பாண்டியன் நடிப்பில் 1995 இல் வெளியான அசுரன் திரைப்படத்தில் வரும் பாடல்தான் அது. இதில் மன்சூர் அலிகானும் ஆடி இருப்பார். உண்மையில் கைதி திரைப்படம் முதலில் அவருக்கு தான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் தான் கார்த்தியை கமிட் செய்தார் லோகேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement