Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப சீனியர் சீசன் 5’ நிகழ்ச்சியில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு பரபரப்பு மற்றும் சோகம் கலந்த ஒரு அழகான தருணமாக இணையத்தைக் கலக்கி வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் கடந்த எபிசொட்டில், இலங்கையிலிருந்து வந்த சபேசன் என்ற இளைஞர் பாடிய பாட்டும், அதன்பின் அவர் பகிர்ந்த வாழ்க்கை அனுபவமும், பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களின் மனதை உருக வைத்தது.
அந்நிகழ்வின் போது “நான் எப்பவுமே அதிர்ஷ்டம் இல்லாத ஆள்…” என்ற வார்த்தையில் தொடங்கி, “இப்போ ஜெயிச்சிட்டேன்…” என்ற மகிழ்ச்சியில் முடிவடைந்த அவரது கதை, பல இளைஞர்களுக்கு ஊக்கமும், பேரின்பமும் அளித்துள்ளது.
போட்டியில் பங்கேற்க சபேசன் மேடைக்கு வந்தபோது, சாதாரணமா நடந்து வந்தவர் போல் தெரிந்தார். ஆனால் அவர் பாட ஆரம்பித்ததுமே, அவருடைய குரலும், அதன் பின்னணியில் இருக்கிற உணர்ச்சிகளும், ரசிகர்களை ஈர்த்திருந்தது.
அவர் பாடல் பாடி முடித்த உடனே நடுவர்கள் அனைவரும் ஒருமனதாக select செய்தார்கள். அந்தத் தருணம், சபேசனை மட்டும் அல்ல... பார்த்த ஒவ்வொருவரையும் நெகிழ வைத்தது. பாடல் முடிந்தவுடன் அவர் நின்றபடியே கண்கள் கலங்கி, வாயிலிருந்து வார்த்தைகள் வராத நிலையில் இருந்தது, மேடையில் நின்ற அனைவரையும் அமைதியாக சிந்திக்கவைத்தது.
பின்னர் சபேசன், "நான் எப்பவுமே அதிர்ஷ்டம் இல்லாத ஆள். என் வீட்டில என்னால நல்லது நடந்ததே இல்ல. Degree முடிச்சு 5 வருஷம் ஆகுது. வேலை கிடைக்கல. வீட்டில நிறைய பொறுப்புக்கள் இருக்கு. அதனால தான் இசையில் ஏதாவது சாதிக்கணும் என்பதற்காக வந்தேன்." என்று உணர்வுபூர்வமாக தெரிவித்திருந்தார்.
மேலும், "போன வருஷம் இங்க வந்து Try பண்ணேன். அப்போ select ஆகல. அதனால நிறைய பேர் என்னைத் திட்டினாங்க. சிரிச்சாங்க. குடும்பத்தில உள்ளவங்க கூட நம்பல. ஆனா இந்த முறை ஜெயிச்சிட்டேன். அது தான் பெரிய சந்தோசம்." என்றார் சபேசன்.
சபேசன் இப்போது ஒரு போட்டியாளராக இல்லாமல், பல இளைஞர்களின் நம்பிக்கையாக இருக்கின்றார். “அதிர்ஷ்டம் இல்லாதவனும் ஒரு நாள் ஜெயிக்க முடியும்” என்பதற்கான உயிருள்ள உதாரணமாக அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன.
Listen News!