• May 20 2024

பெற்ற தாயின் நெருக்கத்தை உணர்ந்தேன்; என் உயிரின் ஒரு பாகத்தை வெடி எடுத்தது போன்ற வலியை உணருகிறேன்- வாணியின் மறைவால் துவண்டு போன செய்தி வாசிப்பாளரின் உணர்ச்சிபூர்வ பதிவு..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பலராலும் மறக்க முடியாத ஒரு பாடகியே வாணி ஜெயராம். இவர் 10 ஆயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்களை பாடி இந்திய இசையுலகையே தனது குரலினால் ஆட்சி செய்து வந்தவர். அதாவது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கின்றார். அதுமட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதையயும் தனது குரலினால் வசீகரித்துள்ளார்.


இந்நிலையில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. இதனால் இவரது மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் கூறி மறைவுக்கு நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளரான ரத்னா கூறிய பல விடயங்கள் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.


அதாவது சமீபத்தில் அவர் வாணி ஜெயராமுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் தங்களது பழக்க வழக்கங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றார். அதாவது "வாணி அம்மா ஒரு பாடகி என்பது மட்டும் தான் எனக்குத் தெரியும். அதைத்தாண்டி பெரிய பழக்க வழக்கம் எங்களுக்குள்ள ஆரம்பத்தில் இருந்தது கிடையாது. ஆரம்பத்தில் ஒருமுறை ஒரு டாக்டரின் வாயிலாக தான் அவங்கள சந்திக்க வாய்ப்பு கிடைச்சது.

அந்தவகையில் சுமார் பத்து வருடங்களுக்கு முன் Dr.கமலா வீட்டு கொலுவில் வாணி அம்மாவை முதன்முதலில் சந்தித்தேன்..’அதாவது ரத்னா thematic கொலு வீடு முழுக்க வைப்பாள். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்' என வாணி அம்மாவிடம் கூறி இருந்தார் Dr.கமலா. வாணி அம்மாவும் என் நம்பரை வாங்கிக் கொண்டார்கள். ஏதோ மரியாதை கருதி வாங்கிக் கொண்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு அடுத்த நாள் இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. 


ஏனெனில் வாணி அம்மா cell phoneஇல் என்னை அழைத்தார்கள். நானும் ஜெயராம்ஜியும் நாளை கொலு பார்க்க வரலாமா என்று கேட்டார்கள். அந்த நொடியை வார்த்தைகளால் என்னால் விளக்க முடியாது. என்னை நானே கிள்ளி பார்த்து இது கனவல்ல நிஜம் என்பதை உணர்ந்தேன். அதன் மூலமாக தான் அவங்களோட நட்பு எனக்கு ஆரம்பத்தில கிடைச்சது. வழக்கமாக ஒரு செய்தியாளரை எல்லாருமே எப்படிப் பார்ப்பங்களோ அதேமாதிரித் தான் அவங்க என்னைப் பார்த்திருந்தாங்க. 

எனது செய்தித்துறை அனுபவம் தொடர்பாக என்னிடம் ஏராளமான கேள்விகளை கேட்டிருந்தார். இதைத் தாண்டி எங்களுடைய நட்பு அடுத்த கட்டத்திற்கு நகர முக்கிய காரணம் சேலை தான். மற்றவங்க கேட்பது போலவே வாணி அம்மாவும் என்னைப் பார்த்ததும் இந்த சாறி நல்லா இருக்கு, எங்க வாங்கினாய் எனக் கேட்டிருந்தார். இதன் பின்னர் தான் எங்க நட்பு நெருக்கமானது. நான் என்ன சாறி உடுத்தினாலும் அவங்களுக்கு பிடிக்கும். இதன் பின்னர் அவர் என்னை ஒரு மகள் மாதிரி பார்க்க ஆரம்பித்தார். 


அந்தவகையில் அன்று தொடங்கிய எங்கள் உறவு ஒரு இசைக்கலைஞருக்கும் ரசிகைக்கும் உள்ள உறவின் எல்லைகளைத் தாண்டி அம்மாவிற்கும் மகளுக்குமான ஒரு வித personalized ஆத்மார்த்த உறவாக மாறியது. அது நான் செய்த பெரும் பாக்கியம். 

அவர் என்னுடைய வீட்டிற்கு வருகிறார் என்றால் நான் அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்பேன் அவர் மசால் தோசை பண்ணு, ஐ லவ் இட்லி என்று பண்ணு, போல சொல்வார்கள். மேலும் எனக்கு எந்த சாறி அழகாக இருக்கும் என்று அவங்க சொல்லுவாங்க, அதேபோல அவங்களுக்கு எந்த சாறி நல்லா இருக்கும் என்று நான் சொல்லுவேன். ஆரம்பத்தில் வாணி அம்மாவை பார்க்க மாட்டேனா, அவங்க பக்கத்தில போக மாட்டேனா  என்று எல்லாம் ஏங்கி இருக்கேன்.

ஆனால் அவங்க என்னை தன் மகள் மாதிரி நாளடைவில் பார்த்தாங்க. என்னை பெத்த தாயைப் போலவே நானும் வாணி அம்மாவைப் பார்த்திருந்தேன். எல்லாமே நல்ல மாதிரி இருந்த நேரத்தில அவங்களுக்கு இப்படி ஆகும் என்று நான் நினச்சு கூடி பார்க்கல. அடுத்த வாரம் தான் அவங்கள பார்க்க போகலாம் என்று இருந்தேன், அதுக்குள்ளே இப்படி ஆகும் என்று நான் நினைக்கல, நான் அவங்கள ரொம்பவே மிஸ் பண்ணுறேன்" என ரொம்பவே கவலையுடன் தெரிவித்திருந்தார் ரத்னா.


அதுமட்டுமல்லாது சமீபத்தில் தான் அவருக்கு போன் செய்து "பணியாளர் வந்தாங்களா? எல்லா வேலைகளுக்கு சரியாக முடிந்ததா? ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொன்னேன். அவர் நான் பத்திரகமாத்தான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று சிரித்துக்கொண்டே சொன்னார். இப்படி எல்லாவற்றிலும் பக்குவமாக இருக்கும் வாணி அம்மாவோட பிரிவை என்னால் தாங்க முடியவில்லை. 

என் தாய்க்கு நிகராக நான் நேசிக்கும் வாணி அம்மாவை இப்போது இழந்து விட்டேன். என் உயிரின் ஒரு பாகத்தை யாரோ வெட்டி எடுத்தாற் போன்ற அடக்க முடியாத வலியை உணருகின்றேன்" எனத் தன்னுடைய அடக்க முடியாத துயரத்தை பகிர்ந்துள்ளார் செய்தியாளர் ரத்னா.

Advertisement

Advertisement