• Jul 11 2026

நான் இயக்கிய படங்களை பார்க்க மாட்டேன்… ஆனால் இந்த ஒரு படத்துக்கு மட்டும் அடிமை!– அர்ஜுன்

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் அர்ஜுன். பல ஆண்டுகளாக அதிரடி கதைகளில் நடித்துவந்த அவர், தன்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக ரிதம் திரைப்படத்தை சமீபத்தில் நினைவுகூர்ந்துள்ளார். தற்போது அவர் பேசிய கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


அர்ஜுன் கூறியதாவது, “நான் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்துக்கொண்டே இருந்தேன். ஆனால் ‘ரிதம்’ மாதிரி ஒரு மென்மையான, உணர்ச்சிபூர்வமான படம் செய்ய வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அந்த சமயத்தில் இயக்குநர் வசந்த் வந்து இந்தக் கதையை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும், இந்த படம் ரசிகர்களிடம் வேலை செய்யுமா என்ற ஒரு குழப்பம் இருந்தது. ஏனெனில் சில நல்ல படங்கள் கூட திரையரங்கில் ஓடாமல் போய்விடும்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “படம் வெளியான முதல் சில நாட்களில் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை போல தோன்றியது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் குடும்ப ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் நல்ல பெயரும் கிடைத்தது,” என கூறினார்.

அதோடு, “நான் இயக்கிய படங்களை கூட டிவியில் போட்டால் முழுசாக பார்க்க மாட்டேன். ஆனால் ‘ரிதம்’ படம் வந்தால் மட்டும் உட்கார்ந்து முழுவதும் பார்ப்பேன்,” என்ற அவரது உணர்ச்சிபூர்வமான பேச்சு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement

Advertisement