• May 09 2024

இந்த படத்தில் எப்படி நடித்தேன் என்று எனக்கே தெரியவில்லை- தி க்ரே மேன் படம் குறித்து மனம் திறந்த தனுஷ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சர்வதேச அளவில் சிறப்பான ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர் தான் தனுஷ். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகின்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் மாறன் என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி உள்ளிட்ட தமிழ் படங்கள் உருவாகி வருகின்றது. தற்போது அவர் ஹாலிவுட்டில் நடித்துள்ள தி க்ரே மேன் படம் வரும் 22ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

அவெஞ்சர்ஸ் படத்தை எடுத்த ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெயிலரும் இதை உறுதி செய்துள்ளது. தனுஷ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் கூறியதாவது இந்தப் படத்தில் எப்படி கமிட்டாகி நடித்து முடித்தேன் என்பது குறித்து எனக்கே தெரியவில்லை முதலில் படக்குழுவிடமிருந்து எனக்கு போன் கால் வந்தது. நான் சம்மதம் கூற முதலே உடனடியாக என்னை உறுதி செய்து விட்டார்கள் என்று கூறினார்.

இதை தொடர்ந்தே தான் படம் குறித்து கேட்டதாகவும் அவர்கள் பதில் சொன்னதும் தான் வாவ் என்று துள்ளி குதித்ததாகவும் தனுஷ் கூறியுள்ளார். இதுபோன்ற பெரிய வாய்ப்புக்காக தான் நீண்ட நாட்களாக காத்திருந்ததாகவும் இதன்மூலம் தன்னுடைய திறமையை சர்வதேச அளவில் நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிற செய்திகள்

Advertisement

Advertisement

Advertisement