• May 19 2024

கனவுத் தொழிற்சாலையின் ரசிகர்களால் மறக்க முடியாத கனவுக் கன்னி..சிலுக்கு ஸ்மிதா

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா என்பது ஓர் கனவுத் தொழிற்சாலை. ரசிகனுக்கு கனவை விதைத்துக் காசை அறுவடை செய்யத் தயாரிப்பாளர் முதல் நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், துணைநடிகர் வரையில் கடுமையாக உழைப்பார்கள். அந்தக் கனவுத் தொழிற்சாலையில் பலமொழி ரசிகர்களைக் கட்டிப் போட்ட கனவுக் கன்னி தான் சில்க் ஸ்மிதா.

இவர் தனது திரைத்துறை வாழ்க்கையை இரண்டாம் நிலைக் கலைஞர்களுக்கான ஒப்பனைக் கலைஞராக ஆரம்பித்தார். நடிகரும் இயக்குனருமான வினுச்சக்கரவர்த்தியின் மூலமாக 1979-ஆம் ஆண்டில் 'வண்டிச் சக்கரம்' எனும் தமிழ்த் திரைப்படத்தின் மூலமாக ஸ்மிதா எனும் பெயரில் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் சிலுக்கு என்ற பெயரில் சாராயம் விற்கும் பெண்ணாக அறிமுகமானார். சிலுக்குவின் மயக்கும் கண்களும் விரசம் சொட்டும் வசனங்களும் வண்டிச்சக்கரத்தைப் பெரும் வெற்றிச் சக்கரமாகச் சுழல வைத்தது. சிலுக்குவின் நடிப்பும் சேர வசூலில் சாதனை படைத்தது.

அதற்குப் பின்னர் ஸ்மிதா சிலுக்கு ஸ்மிதாவாகினார். அதன் பின்னர் 1981 இல் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லையில் அவரது எலிசி பாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது. தொடர்ந்து கமலின் மூன்றாம் பிறை, சகலகலாவல்லவன், பட்டணத்து ராஜாக்கள், தீர்ப்பு, தனிக்காட்டு ராஜா, ரங்கா, மூன்றுமுகம் என அவரது தமிழ் படங்களின் வரிசை நீண்டது. தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என சிலுக்கு ஸ்மிதாவின் கவர்ச்சிப் புயல் நீண்டது.

கமலுடன் சகலகாலவல்லவனுடன் கமலுடன் சிலுக்கு பாடி ஆடிய நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போனது யம்மா ……… என்ற பாடல் காலம் கடந்தும் ரசிகர்களால் பேசப்படுகின்றது. இப்படிப் பல பாடல்கள். சிலுக்கு ஸ்மிதா இருந்தால் தான் படம் ஓகோவென ஓடுமென ஒரு காலம் இருந்தது. அவரது போதையூட்டும் கண்களும் ஈரமான சொண்டை ஒரு விதமாக பார்க்கும் பார்வையும் விரகம் சொட்டும் வசனங்களும் பலகோடி ரசிகர்களை அவருக்குக் கொடுத்தது.

1979 இல் வண்டிச்சக்கரத்தில் ஆரம்பித்த சிலுக்குவின் சினிமாப் பயணம் 1996 இல் கோயம்புத்தூர் மாப்புளையுடன் முடிவடைந்தது. சிலுக்கு தற்கொலை செய்து துயரமான மரணத்தைத் தேடிக் கொண்டார். படம் தயாரித்துப் பணம் உழைக்கும் ஆசையில் படம் எடுத்து கடனாளியாகியதால் சிலுக்கு ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார். காதல் தோல்வி, அளவுக்கு மீறிய போதை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை தொடர்பாக இப்படியே பல கதைகள் உலாவின. ஆனாலும் சிலுக்குவின் கவர்ச்சிப் புயல் தென்னிந்திய சினிமாவின் ஒரு சகாப்த வரலாறு என்பது மட்டுமே உண்மை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement