• Sep 21 2024

கமல் நடிப்பை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை -சூப்பர் ஸ்டார்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் கமல்ஹாசன் . இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தை இவரது தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

மேலும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதிஇ பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தனர் . இப்படத்தின் வெற்றியினால் படக்குழுவினருக்கு கமல் பரிசுப் பொருட்களையும் வழங்கியிருந்தார்.

அதிலும் சூர்யாவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய ரோலக்ஸ் மணிக்கூடை வழங்கினார். இது குறித்த புகைப்படங்களும் வீடியோவும் வைரலாகி இருந்தது. இப்படத்தினன் வெற்றிக்காக பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விக்ரம் படத்தை பார்த்து வியந்து ட்விட்டரில் பேசி இருக்கிறார்.

"விக்ரம் பிளாக்பஸ்டர் படம். இயக்குனர் லோகேஷ் உங்களை சந்தித்து விக்ரம் படம் உருவானது பற்றி பேச விரும்புகிறேன். விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் ஜொலித்து இருக்கின்றனர். இதை விட சிறப்பாக நடிக்க முடியாது. அனிருத் மியூசிக் சிறப்பு."

"இறுதியாக லெஜெண்ட் கமல்ஹாசன் நடிப்பை பற்றி விமர்சிக்க எனக்கு தகுதி இல்லை. உங்கள் ரசிகனாக நான் சொல்கிறேன், இது ஒரு பெருமையான தருணம்" என தெரிவித்து இருக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement