விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடராக ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியல் சிறப்பான கதைக் களங்களைக் கொண்டு முன்னேறி வருகின்றது. தற்பொழுது இந்தக் கதையில், இனியாவின் திருமண ஏற்பாடுகள் அதிரடித் திருப்பங்களுடன் நடைபெற்று வருகின்றன.
இனியாவின் திருமணத்திற்காக வீட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகின்றதுடன் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதன் போது, எதிர்பாராத திருப்பமாக சில பிரச்சனைகளும் எழுகின்றன. இவை கதையின் நெருக்கடியான திசையை உருவாக்கின்றது.
இந்த 'பாக்கியலட்சுமி' சீரியலில், கோபியின் நண்பராக நடித்த நடிகர் அரவிந்த், தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே சிறப்பான இடத்தை பெற்றிருந்தார். தற்போது அவர் 'சரோஜினி' என்ற புதிய சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'சரோஜினி' தொடரில், அரவிந்தின் கதாப்பாத்திரம் மிகவும் வலுவானதாக காணப்படுகின்றது. அவரது புதிய அவதாரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடிகை குஷ்பு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'சரோஜினி' தொடர், ஏப்ரல் 14ம் திகதி இரவு 9.00 மணிக்கு டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதில் குஷ்பு மிகவும் உணர்வு பூர்வமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!