• May 19 2024

வெளியானது காதலை மையமாக கொண்ட 'மாடர்ன் லவ் சென்னை' வெப் தொடரின் டிரைலர்... வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாரதிராஜாவுடன் இணைந்து 6 வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கிய ஒரு வெப் தொடர் தான் 'மாடர்ன் லவ் சென்னை'. இந்த ஆந்தாலஜி வெப் தொடர் ஆறு அத்தியாயங்களை கொண்டு உருவாகியுள்ளது. இதில் முதல் அத்தியாயமான ‘லாலா குண்டா பொம்மைகள்’ என்பதை ராஜு முருகன் என்பவரும், இரண்டாவது அத்தியாயமான ‘இமைகள்’ என்பதை பாலாஜி சக்திவேல் என்பவரும் இயக்கி உள்ளனர். 

அத்தோடு மூன்றாவது அத்தியாயமான ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ யை கிருஷ்ணகுமார் ராம்குமாரும், நான்காவது அத்தியாயமான ‘மார்கழி’ என்கிற சீரிஸை அக்‌ஷய் சுந்தரும் இயக்கியிருக்கின்றனர். 

அதேபோல் ஐந்தாவது அத்தியாயமான ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்பதை பாரதிராஜாவும், ஆறாவது அத்தியாயமான ‘நினைவோ ஒரு பறவை’ என்பதை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளனர்.மேலும் இந்த வெப் தொடருக்கு ஜிவி பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், இளையராஜா ஆகிய 4 இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப்பத்தொடரின் டிரைலர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement