• May 04 2024

‘குஷி'யில் சமந்தாவை விரட்டி விரட்டி காதலிக்கும் விஜய் தேவர்கொண்டா- கியூட்டான மேக்கிங் வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!

சமந்தா நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் குஷி. இப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார்.

 தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முஸ்லீம் பெண்ணாக நடிகை சமந்தா நடிக்கிறார்.


குஷி படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் பாடல், நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளன்று வெளியாகியது.என் ரோஜா நீதான் எனத் தொடங்கும் ரொமாண்டிக் பாடலான இதற்கு மதன் கார்க்கி பாடல் வரிகள் எழுதி உள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் தான் பாடி உள்ளார். 

இந்த நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை விஜய் தேவர்கொண்டா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement