• Apr 30 2024

'வாரிசு' பட இசை வெளியீட்டு விழாவில் தோன்றிய அஜித்... யாருமே எதிர்பார்த்திராத அந்தப் புகைப்படம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'வாரிசு'. இப்படத்தின் ரிலீசுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதாவது விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான 'பீஸ்ட்' படம் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்ததால், அவர் தற்போது நடித்து முடித்துள்ள 'வாரிசு' படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 


‘வாரிசு’ படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இப்படத்தினுடைய இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

இப்படத்தின் உடைய இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவுடன் இணைந்து பல திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்ச்சியின் நிறைவில் அரங்கத்தில் இருந்த அனைவருடனும் வீடியோ ஒன்றை எடுத்து ட்விட்டர் பக்கத்தில் விஜய் பதிவு செய்திருந்தார். 


இவர் வெளியிட்ட இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது. இந்நிலையில், வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று திரையிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தற்போது அதனை வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement

Advertisement