• Aug 20 2025

இலங்கை வந்தடைந்த நடிகை ஹன்ஷிகா..! எதற்காகத் தெரியுமா.? வெளியான அப்டேட் இதோ.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிரபலமான பாலிவுட் மற்றும் கோலிவூட் நடிகை ஹன்சிகா மோத்வானி, இன்று (ஜூலை 9) மும்பையிலிருந்து நேரடியாக இலங்கை வந்தடைந்துள்ளார். அவரது வருகை குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியிருந்த நிலையில், அவர் கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியதுடன், பலரும் அவரை பார்ப்பதற்காக காத்திருந்தனர்.


இந்த வருகை, ஹன்சிகாவிற்கு முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. விமான நிலையத்தில் அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து வரவேற்றனர். புகழ்பெற்ற ஆடம்பர நிகழ்ச்சிகள் மற்றும் சர்வதேச அழகுக் கண்காட்சிகளில் தன் பங்கேற்பு மூலம் எப்போதும் பேசப்படுபவர் ஹன்சிகா. 


இப்போது அவர் கொழும்பில் நடைபெறும் ஒரு தனியார் நிகழ்வில் கலந்துகொள்ளவே வருகை தந்துள்ளார். இலங்கை வந்தவுடன் கொழும்பு விமான நிலையத்தில் அவர் எடுத்துக்கொண்ட  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement