• Jan 15 2025

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு விபரம் இதோ...

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

பரோட்டா சூரி என்று கொண்டாடப்பட்டு வந்த நடிகர் சூரி ஆரம்பத்தில் செட் அசிஸ்டெண்ட், ஆர்ட் அசிஸ்டெண்ட், ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் என கிடைத்த வேலைகளை செய்து சங்கமம், தீபாவளி, வின்னர் போன்ற படங்களில் சில நிமிடம் தலை காட்டி வந்துள்ளார், சின்னத்திரையிலும் நடித்து வந்துள்ளார்.


கஷ்டப்பட்டு சாதிக்க துடித்த இந்த கலைஞனுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு தான் வெண்ணிலா கபடி குழு அங்கு ஆரம்பித்த பயணம் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் படங்களில் இணைந்து நடித்து வந்தார். காமெடியனாக கலக்கிவந்த சூரி விடுதலை படம் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.


கொட்டுக்காளி படம் தான் அதிக பேச்சாக உள்ளது.காமெடியனாக களமிறங்க இப்போது சிறந்த நாயகனாக கலக்கிவரும் சூரிக்கு இன்று பிறந்தநாள்.இந்த நிலையில் நடிப்பை தாண்டி ஹோட்டல் தொழில் நடத்தி வெற்றிக்கண்டு வரும் சூரியின் சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வலம் வருகிறது. ஒரு படத்துக்கு ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் சூரியின் சொத்து மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 



Advertisement

Advertisement