• Sep 16 2026

பாகுபலி அனுஷ்காவா இது! எம்.எஸ்.பாஸ்கர் வீட்ல விசேஷம்! வளைகாப்பு விழாகொண்டாடும் ஐஸ்வர்யா!

shali / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்களால் கொண்டாடப்படும் குணசித்திர நடிகராக எம்.எஸ். பாஸ்கர் வலம் வருகிறார். கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் மிரட்டி விட்டது.


சமீபத்தில், வெளியான போட் திரைப்படமும் அவருக்கு சிறப்பான கதாபாத்திரத்தை கொடுத்தது. கீர்த்தி சுரேஷின் தாத்தாவாக ரகு தாத்தா படத்தில் நடித்திருந்தார். எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.


பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசுபவர் அவர். ஐஸ்வர்யா பாஸ்கருக்கு 2021ல் அகுள் சுதாகர் என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. ஐஸ்வர்யா பாஸ்கர் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருக்கு வளைகாப்பு நடந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் இதோ. 

Advertisement

Advertisement