ஆதிக் ரவி இயக்கத்தில் அஜித் ,திரிஷா ,பிரபு என திரைபட்டாளமே நடிக்கும் "good bad ugly" திரைப்படம் ஏப்ரல் 10 வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. விடாமுயற்சி பட படு தோல்வியின் பின்னர் அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப் படத்திற்கு முன்னனி பாடகர் ஜி .வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இவரது இசையில் இப் படத்தின் இரண்டாவது சிங்கிள் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இப் ப்ரோமோ வீடியோவில் அனிருத் பாடியுள்ளார். மேலும் ஜி வி இசையில் அனிருத் பாடும் முதல் பாடல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றும் இப் பாடல் "god bless you மாமே .." என ஆரம்பிப்பதுடன் முழு பாடல் நாளை வெளியாகவுள்ளது. இது செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இரண்டு இசை பிரபலங்களும் இணைவதால் படத்துக்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப் படம் அதிகளவில் வசூலித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!